சொல் பொருள்
அடைகாத்தல் – வெளிப்போகாது வீட்டுள் இருத்தல்
சொல் பொருள் விளக்கம்
கோழி முட்டையிட்டு இருபத்தொருநாள் அடை கிடக்கும். அடைவைத்த நாளில் இருந்து எண்ணிக் கொள்ளலாம். குஞ்சுபொரித்து வெளிப்படும் வரை அடை காக்கும் கோழி, தீனி நீர் ஆகியவற்றையும் கருதுவது இல்லை. அடையைவிட்டு வெளிப்படவும் எளிதில் விரும்புவதில்லை. அடை கிடக்கத் தடையொன்று வருவதாயின் அதனை எதிர்த்துப் போரிடவும் துணியும். அவ்வடைகாக்கும் வழக்கத்தில் இருந்து, கிடந்த கிடப்பை விட்டோ, வீட்டை விட்டோ வெளிப்படாமல் இருத்தல் என்னும் பொருள் அதற்குப் பிறந்தது. வீட்டை விட்டு வெளிப் போகாத பிள்ளைகளை “ஏன் அடைகிடக்கிறாய்? வெளியே போய் வாயேன்’’என்பது வழக்காயிற்று.
குறிப்பு:
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்