Skip to content

சொல் பொருள்

(பெ) கழுத்து,  தாடி,

அணல் : மோவாயின் கீழுள்ள தாடி. (நற்றிணை. 179. அ. நாராயண.)

சொல் பொருள் விளக்கம்

கழுத்து,

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

neck, beard

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

இல் எழு வயலை ஈற்று ஆ தின்றென,
பந்து நிலத்து எறிந்து, பாவை நீக்கி,
அவ் வயிறு அலைத்த என் செய் வினைக் குறுமகள்
மான் அமர்ப்பன்ன மையல் நோக்கமொடு,
யானும் தாயும் மடுப்ப, தேனொடு	5
தீம் பால் உண்ணாள் வீங்குவனள் விம்மி,
நெருநலும் அனையள்மன்னே; இன்றே,
மை அணற் காளை பொய் புகலாக,
அருஞ் சுரம் இறந்தனள் என்ப- தன்
முருந்து ஏர் வெண் பல் முகிழ் நகை திறந்தே. - நற்றிணை. 179. அ. நாராயண.)

கறை அணல் குறும்பூழ் கட்சி சேக்கும் – பெரும் 205

கறைபடிந்த கழுத்தினையுடைய காடை தன் புகலிடத்தில் தங்கும்

புலி போத்து அன்ன புல் அணல் காளை – பெரும் 138

ஆண்புலியைப் போன்ற புல்லென்ற தாடியையுடைய தலைவன்

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *