சொல் பொருள்
அண்டா – மிகுதியான அளவில் சோறாக்குதற்குப் பயன்படுத்தும் வெண்கல ஏனம்; கொப்பரை என்பதும் அது.
குண்டா – அண்டாவில் ஆக்கப்பெற்ற சோற்றை அள்ளிப்போட்டுப் பந்தியில் பரிமாறுதற்குப் பயன்படுத்தும் ஏனம்.
சொல் பொருள் விளக்கம்
கலவகையைச் சேர்ந்தவை இவை. வடிவ அமைப்பால் இரண்டும் ஒத்தவை. பருமை சிறுமையால் வேறுபட்டவை. அண்டாவிற்குக் கைப்பிடி வளையங்கள் உண்டு. குண்டாவிற்கு அவை இல்லை. உடல் நலமுறைப்படி “அண்டாச்சோறு அண்டக்கூடாது” என்பர்.
குறிப்பு:
இது ஒரு இணைச்சொல்.
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்