Skip to content

அண்டைஅயல்

சொல் பொருள்

அண்டை – தன் வீட்டை அண்டி (நெருங்கி) இருக்கும் வீட்டார்
அயல் – அண்டை வீட்டுக்கு அடுத்திருக்கும் வீட்டார்.
அண் – நெருக்கம்; அணுக்கம்-நெருக்கம்; அணுக்கர்- நண்பர்; அணிமை – அண்மை, இவற்றால் அண்டை நெருக்கப் பொருளதாதல் கொள்க.
அயலார் – பிறர்; அயவு – அகலம்; ‘திருவருட்கு அயலுமாய்’ என்பார் தாயுமானவர். அயல், அப்பால் என்னும் பொருட்டதாம்.

சொல் பொருள் விளக்கம்

“கொண்டவர்கள் கொடுத்தவர்கள், அண்டியவர்கள் அடுத்தவர்கள் எல்லா மக்களும் நல்லா இருக்கணும்” என்பது வாழ்த்து வகையுள் ஒன்று.

குறிப்பு:

இது ஒரு இணைச்சொல்.

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *