Skip to content

சொல் பொருள்

(பெ) 1. வழி,  2. சக்கை, பொட்டு,

சொல் பொருள் விளக்கம்

1. கற்களும், முட்களும் செறிந்த கரடுமுரடான காட்டுநிலத்தில், மனிதர்கள் அல்லது விலங்கினங்கள் அடிக்கடி பயன்படுத்தியதால் ஏற்படும் இயற்கையான பாதை அதர் எனப்படுகிறது. பெரும்பாலும் விலங்கினங்களின்
நடைபாதையே அதர் எனலாம்.

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

path, husk with particles of grain used as fodder

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

மான் அடி பொறித்த மயங்கு அதர் மருங்கின் – பெரும் 106

ஆன்இனம் கலித்த அதர் பல கடந்து – புறம் 138/1

களிறு வழங்கு அதர கானத்து அல்கி – பொரு 49

புலி வழங்கு அதர கானத்தானே – ஐங் 316/5

மான் அதர் சிறு நெறி வருதல் நீயே – அகம் 168/14

என்ற அடிகளால் இதனை அறியலாம்.

உழுத்து அதர் உண்ட ஓய் நடை புரவி – புறம் 299/2

உழுந்தின் சக்கையைத் தின்று வளர்ந்ததளர்ந்த நடையையுடைய குதிரை
– ஊறவைத்து அரைக்கப்பட்ட உழுந்து ஈண்டுச் சக்கை எனப்பட்டது. அதன் உமியே சக்கையெனப்பட்டது என்றும் கூறுவர்- – ஔவை.சு.து.உரை, விளக்கம்.
– உழுத்து அதர் – உழுந்தின் பொட்டு – ச.வே.சு.உரை

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *