சொல் பொருள்
அழகிய குளிர்ந்த அருளுடையவர்
சொல் பொருள் விளக்கம்
அந்தணன் : அந்தணன் என்பதை அந்தம் + அணன் என்று பிரித்து மறை முடிபுகளைப் பொருத்துகின்றவர் என்று பொருளுரைப்பர் வடமொழியாளர். அம்+தன்மை+அன் என்று பிரித்து அழகிய குளிர்ந்த அருளுடையவர் என்று பொருளுரைப்பர் தென்மொழியாளர். வடமொழி வழியிற் பொருள் கொள்ளினுங் கூட அணவு என்னுஞ் சொல் அண் என்னும் வேரிற் பிறந்த தனித்தமிழ்ச் சொல்லாதலின் அந்தணன் என்பது இருபிறப்பி () யாகும். அந்தணன் என்ற பெயர் அந்தணாளன் என்ற வடிவிலும் வழங்கும். (ஒப்பியன் மொழிநூல். முன்னுரை. 34.)
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்