சொல் பொருள்
அந்தி – மாலைக்கும் இரவுக்கும் இடைப்படுபொழுது.
சந்தி – காலைக்கும் இரவுக்கும் இடைப்படுபொழுது.
சொல் பொருள் விளக்கம்
மாலைக்கடை அந்திக்கடை எனப்படும். சில ஊர்களில் அந்திக்கடைத் தெரு, அந்திக்கடைப் பொட்டல் என்னும் பெயர்கள் தம் பழமையைச் சொல்லிக் கொண்டு இன்றும் உள்ளன. அந்தி மாலைச் சிறப்புச் செய் காதை என்பது சிலம்பில் ஒரு காதை. இரவுக்கடை அல்லங்காடி என்பதும்பகற்கடை எல்லங்காடி என்பதும் சிலப்பதிகார ஆட்சி. இந்நாளில் புதிய புதிய மாலைக் கடைகளும் இரவுக்கடைகளும் பெருகுகின்றன.
ஆனால் தமிழில் பெயர் இருந்தால் தலையே போய்விடும் என்பது போல ஆங்கில மயக்கத்தில் குலவுகின்றன. தமிழால் வாழும் தமிழனுக்கும் தமிழ்பற்று இல்லை என்றால், நன்றியில்லாப் பிறப்பாளர் என்பதற்கு நாக்கூச வேண்டுவதில்லையாம். சந்தி, முச்சந்தி, நாற்சந்தி சந்திப்பதால் வந்தது போல, இரவும் பகலும் சந்திப்பதால் வந்த பெயர். சிலர் காலையையும் ‘அந்தி’ என்பர். ‘அதற்கு வெள்ளந்தி’ என்பது பெயர் காலை நியமம் ‘சந்தியாவந்தனம்’ எனப்படுதல் அறிக.
குறிப்பு:
இது ஒரு இணைச்சொல்.
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்