சொல் பொருள்
(பெ) 1. கள்ளுண்ட மயக்கம் : பார்க்க : அனந்தர்
2. மந்த ஒலி,
சொல் பொருள் விளக்கம்
1. கள்ளுண்ட மயக்கம் : பார்க்க : அனந்தர்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
low tone
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: பழம் செருக்கு உற்ற நும் அனந்தல் தீர – மலை 173 பழைய களிப்பினால் அடைந்த உமது போதைமயக்கம் தீரும்படி நிறம் கிளர் உருவின் பேஎய் பெண்டிர் எடுத்து எறி அனந்தல் பறை சீர் தூங்க – புறம் 62/4,5 நிறம் மிக்க வடிவையுடைய பேய் மகளிர் மேன்மேலும் கொட்டுகின்ற மந்தமான ஓசையையுடைய பறையினது தாளத்தே ஆட
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்