Skip to content

சொல் பொருள்

1. (சு.பெ) அந்த,

2. (பெ.அ) அவ்வளவு, அத்துணை, அத்தனை

3. (பெ) அன்னை என்பதன் இடைக்குறை,

சொல் பொருள் விளக்கம்

அந்த,

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

that

 so much, so many

an abbreviation of அன்னை

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

கனவின் வந்த கானல் அம் சேர்ப்பன்
நனவின் வருதலும் உண்டு என
அனை வரை நின்றது என் அரும் பெறல் உயிரே – கலி 128/24-26

கனவில் வந்த அந்த கடற்கரைச் சோலையின் தலைவன் நனவிலும் வருவான் என்று அந்த (நம்பிக்கையின்) எல்லையில் நிற்கின்றது அரிதாக எனக்குக் கிட்டியிருக்கும் என் உயிர்

நினைந்து
மருண்டனென் அல்லெனோ உலகத்து பண்பே
நீடிய மராஅத்த கோடு தோய் மலிர் நிறை
இறைத்து உண சென்று அற்று ஆங்கு
அனை பெரும் காமம் ஈண்டு கடைக்கொளவே – குறு 99/2-6

பெரிதும் நினைத்து மயங்கினேன் அல்லவா! இது உலகத்து இயற்கை; உயர்ந்த மரத்தின் உச்சிக் கிளைகளைத் தொட்டுக்கொண்டு சென்ற பெருவெள்ளம் இறைத்து உண்ணும் அளவுக்குக் குறைந்து அற்றுப்போய்விடுவது போல
அவ்வளவு பெரிய காமம் (உன்னைக் கண்டவுடன்) இங்கு வடிந்துவிடுதலை

காமம் தாங்கு-மதி என்போர் தாம் அஃது
அறியலர்-கொல்லோ அனை மதுகையர்-கொல் – குறு 290/1,2

காம நோயைப் பொறுத்துக்கொள்க என்போர், தாம் அதனைப் பற்றி அறியமாட்டாரோ? அல்லது, அத்துணை வன்மை உடையவரோ?

எனை நாள் தங்கும் நும் போரே அனை நாள்
எறியார் எறிதல் யாவணது – புறம் 301/7,8

எத்தனை நாட்கள் நும்முடைய போர் இங்கேநிகழும், அத்தனை நாளும் தன் மேல் படையெறிந்து போர்தொடுக்காதவரைத் தான் எறிவது யாங்குளது

கறி வளர் சிலம்பின் கடவுள் பேணி
அறியா வேலன் வெறி என கூறும்
அது மனம் கொள்குபஞ்சுத்தலையையும் கொண்ட குரங்கின் வலிய குட்டி
வை அனை – ஐங் 243/1-3

மிளகுக் கொடிகள் வளர்ந்திருக்கும் மலைச் சரிவிலிருக்கும் கடவுளைத் தொழுது உண்மையை அறியாத வேலன் இதனைத் தீயசக்தியின் தாக்கம் என்று கூறுவான்; அதனையே உண்மையென்று உன் மனத்தில் கொள்கிறாய் அன்னையே!

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *