சொல் பொருள்
(பெ) ஒரு பறவை,
சொல் பொருள் விளக்கம்
ஒரு பறவை,
சங்க இலக்கியங்களில் 17 முறை இப்பறவை குறிப்பிடப்பட்டுள்ளது.
பத்துப்பாட்டு நூல்களுள், குறிஞ்சிப்பாட்டில் (அடி 219) இது குறிப்பிடப்பட்டுள்ளது
எட்டுத்தொகை நூல்களுள்,
நற்றிணையில் 5 முறையும் (பாடல்கள்:124,152,218,303,335)
குறுந்தொகையில் 3 முறையும் (பாடல்கள் 160,177,301)
கலித்தொகையில் 3 முறையும் (பாடல்கள் 129,131,137)
அகநானூற்றில் 5 முறையும் (பாடல்கள் 50,120,260,305,360)
இப் பறவை குறிப்பிடப்பட்டுள்ளது.
இக் குறிப்புகளின்படி,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
a bird
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: இப்பறவை மிகப்பெரும்பாலும் ஆண்-பெண் என்று இணையாகவே வாழும் ஒரு தனி அன்றில் உயவு குரல் கடைஇய – அகம் 305/13 இப்பறவைகள் மிகப்பெரும்பாலும் பெண்ணை என்ற பனைமரத்தில் தங்கும். மனை சேர் பெண்ணை மடி வாய் அன்றில் – அகம் 50/11 இவை வளைந்த வாயை (அலகுகளை)க் கொண்டிருக்கும். எனவே இவை மடிவாய் அன்றில் , கொடுவாய் அன்றில் என அழைக்கப்படுகின்றன கொம்பு ஊதுவதைப் போன்ற ஒலியை எழுப்பும். இதனை நரலுதல் என்போம். ஏங்கு வயிர் இசைய கொடு வாய் அன்றில் ஓங்கு இரும் பெண்ணை அக மடல் அகவ – குறி 219,220 அன்றிலும் பையென நரலும் – குறு 177/4 இவை இரவில் கூவமாட்டா இன் துணை அன்றில் இரவின் அகவாவே – கலி 131/28 இவற்றின் கால்கள் கருமையாக இருக்கும் எனவே இவை கருங்கால் அன்றில் (குறு 301/3) எனப்படுகின்றன. மாலையில் இவை துணையுடன் புணரும் செக்கர் தோன்ற துணை புணர் அன்றில் எக்கர் பெண்ணை அக மடல் சேர – அகம் 260/6,7 இப்பறவையில் இருவகை உண்டு என்பர். ஒருவகைக்குத் தலை சிவப்புநிறமாக இருக்கும். நெருப்பின் அன்ன செம் தலை அன்றில் இறவின் அன்ன கொடு வாய் பெடையொடு – குறு 160/1,2 இது Red-naped ibis அல்லது Pseudibis papillosa எனப்படும். முழுதும் கருப்பான அடுத்தவகை Plegadis falcinellus எனப்படும்.
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்