சொல் பொருள்
தாய் தந்தை முதலியவர்களை விடாமல் பற்றிக் கொள்ளும் குழந்தையை அப்பி என்பது குமரி மாவட்டப் புதுக்கடை வழக்கு
சொல் பொருள் விளக்கம்
தாய் தந்தை முதலியவர்களை விடாமல் பற்றிக் கொள்ளும் குழந்தையை அப்பி என்பது குமரி மாவட்டப் புதுக்கடை வழக்கு ஆகும். அப்புதல் ஒட்டுதல். சேற்றை அப்புதல் சந்தனத்தை அப்புதல் போல்வது. தாயை விடாமல் திரியும் இளமையான ஆட்டுக்குட்டி அப்புக் குட்டி எனப்படும். இன்னும், தாயில்லாமல் வேறொரு தாயாட்டில் விட்டுப் பால் குடிக்கச் செய்யும் ஆட்டுக்குட்டி அப்புக்குட்டி எனப்படுதலும் உண்டு.
குறிப்பு:
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்