Skip to content

சொல் பொருள்

(பெ) 1. மரக்கால். ஓர் அளவு கருவி. 2. நீர்செல்லும்குழாய்,

சொல் பொருள் விளக்கம்

“அம்பணத் தன்ன ஆமை” என்பதால் பண்டைக் காலத்தே மரக்கால் யாமை போன்ற உருவமுடையதாயிருந்தது என்றுணரலாம். இதனைப்

“பறைக் கட் பராரையர் அம்பண அளவையர்”

எனவரும் சிலப்பதிகாரத்தினாலும் (14. 209-10) இதற்கு அரும்பத உரைகாரர், “பறைக்கட் பராரை அம்பணம் என்றது பட்டமணிந்த வாயையும், பரிய அரையையும் உடைய அம்பண அளவை; ஆவது, அளக்கும் பறை முதலியன” என்று கூறும் விளக்கத்தானும் அடியார்க்கு நல்லார்

“தரகர் அளக்கும் மரக்கால்” என்று உரை கூறுவதானும் அறிக.

(ஐங்குறு. 43. விளக்கம். பெருமழை.)

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

a measure for grains,

water pipe

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

அம்பண அளவை உறை குவித்து ஆங்கு – பதி 71/5

மரக்கால்களை நெற்குவையில் செருகி வைத்தது போல

அம்பணத்து அன்ன யாமை ஏறி – ஐங் 43/1

மரக்காலை ஒத்த ஆமையின் முதுகின்மேல் ஏறி

கிம்புரி பகு வாய் அம்பணம் நிறைய – நெடு 96

மீனின் வாய்போன்று பகுக்கப்பட்ட நீர்விழும் குழாய் நிறைய

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *