Skip to content

சொல் பொருள்

1. (வி) உண், பருகு

2. (பெ) 1. இரும்பு, இரும்பினாலான கருவி

2. கூர்மை

சொல் பொருள் விளக்கம்

1. உண், பருகு

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

வைகிற்,பழம் சோறு அயிலும் முழங்கு நீர் படப்பை – புறம் 399/11

விடியலில், பழஞ்சோற்றை உண்ணும் முழங்குகின்ற நீரையுடைய தோட்டங்கள்

கரும்பின்,கால் எறி கடிகை கண் அயின்று அன்ன – குறு 267/3

கரும்பின், அடிமரத்தைத் துண்டித்து அதன் துண்டத்தை உண்டது போல

அயில் உருப்பு அனைய ஆகி – சிறு 7

இரும்பு வெப்பமேற்ற தன்மையது ஆகி,

அயில்வாய்க்
கூர்முகச் சிதலை வேய்ந்த – அகம் 167/18,19

வேலின் முனை போன்ற கூரிய முகத்தினையுடைய கறையான் மூடிக்கொள்தலின்

அறை வாய் குறும் துணி அயில் உளி பொருத – சிறு 52

வெட்டின வாயையுடைய குறிய மரக்கட்டையைக் கூர்மையான உளி குடைந்த

அயில் நுனை மருப்பின் தம் கை இடை கொண்டு என – முல் 34

கூரிய முனைகளையுடைய கொம்பினில் தம் துதிக்கையை தூக்கிப்போட்டதைப் போல்

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *