1. சொல் பொருள்
பூசணிக்காய்
2. சொல் பொருள் விளக்கம்
திருமணங்களில் அரசாணிக்கால் நடல் உண்டு. அது அரச மரத்தின் கிளையாகும். அரசுபோல் தளிர்த்து என்னும் வாழ்த்து வகையால் அரசு நடுவதன் நோக்கு புலப்படும். ஆனால், கொங்கு நாட்டில் பறங்கி அல்லது பூசுணைக்காய் (பூசணிக்காய்) அரசாணிக்காய் எனப்படுகின்றது. புதுமனை விழாவில் கண்ணேறு படாமைக் கருத்தில் மனையில் வைத்தலும் கண் காது வாய் முதலியவை வரைதலும் தெருவில் உடைத்தலும் வழக்காக உள்ளமை நாட்டுப் பொதுவழக்கு.
குறிப்பு:
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்