சொல் பொருள்
அரணாவது, மலையும் காடும் நீரும் அல்லாத அகநாட்டுள் செய்த அருமதில்.
சொல் பொருள் விளக்கம்
அரணாவது, மலையும் காடும் நீரும் அல்லாத அகநாட்டுள் செய்த அருமதில். அது வஞ்சனை பலவும் வாய்த்துத் தோட்டிமுள் முதலியன பதித்த காவற்காடு புறஞ் சூழ்ந்து இடங்கர் முதலியன உள்ளுடைத்தாகிய கிடங்கு புறஞ் சூழ்ந்து யவனர் இயற்றிய பல பொறிகளும் ஏனைய பொறிகளும் பதணமும் ஏப்புழை ஞாயிலும் ஏனைய பிறவும் அமைந்து எழுவும் சீப்பும் முதலியவற்றால் வழுவின்று அமைந்த வாயிற் கோபுரமும் பிற எந்திரங்களும் பொருந்த இயற்றப்பட்டதாம். (தொல். புறத். 65. நச்.)
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்