சொல் பொருள்
(பெ) 1. குற்றம், நரம்புகளிலுள்ள கொடுமுறுக்கு, 2. விதை, 3. அரளி, அலரி,
சொல் பொருள் விளக்கம்
1. குற்றம்,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
fault, knot in a string
Oleander, l.sh., Nerium odorum;
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: குரல் ஓர்த்துத் தொடுத்த சுகிர்புரி நரம்பின் அரலை தீர உரீஇ – மலை 23,24 ஓசையை கூர்ந்து கேட்டுக் கட்டின வடித்து முறுக்கின நரம்பில் குற்றம் தீரத் தீற்றி புண்ணரிந்து, அரலை உக்கன நெடும் தாள் ஆசினி – மலை 139 புண்ணாகி வெடித்து, விதைகள் சிந்தப் பெற்றன நெடிய அடியை உடைய ஆசினிப்பலாமரங்கள் அரலை மாலை சூட்டி – குறு 214/6 அரளிப்பூ மாலை சூட்டி
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்