சொல் பொருள்
அராகம் என்பது அறாது கடுகிச் சேறல்
‘அர்’ என்னும் ஒலிக்குறிப்பினின்றும் பிறந்து இசையைக் குறிக்கும் சொல்.
சொல் பொருள் விளக்கம்
(1) அராகம் என்பது அறாது கடுகிச் சேறல்; பிறிதொன்று பெய்து ஆற்ற வேண்டுந்துணைச் செய்வதாகிய பொன்னினை அராகித்தது என்ப ஆகலின் அதுவும் ஒப்பின் ஆகிய பெயராயிற்று. என்னை? மாத்திரை நீண்டும் துணிந்தும் வாராது குற்றெழுத்துப் பயின்று வந்து நடைபெறுதலின்.
(தொல். பொருள். 464. பேரா.)
(2) ‘அர்’ என்னும் ஒலிக்குறிப்பினின்றும் பிறந்து இசையைக் குறிக்கும் சொல். அரங்கன் என்பது ரங்கன் இரங்கன் என்று வழங்கினாற் போல அராகம் என்பதும் ராகம், இராகம் என வழங்குகின்ற தென்க. (ஒப்பியன் மொழிநூல். 110.)
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்