சொல் பொருள்
அரிசி
சொல் பொருள் விளக்கம்
பண்டைத் தமிழ் நாட்டினின்றும் அரிசியை ஏற்றுமதி செய்த கிரேக்கர்கள் அதனை ‘அருஸா’ என்றார்கள். அதுவே ஆங்கிலத்தில் ரயிஸ் (Rice) என்று ஆயிற்று. அரிசி என்னும் சொல் இவ்வளவு பழைமை வாய்ந்ததாயினும் பிங்கலந்தை என்ற பழைய தமிழ் நிகண்டில் அரி என்ற வடிவம் காணப்படுகின்றது. திராவிட மொழிகளுள் ஒன்றாகிய துளுவத்திலும் ‘அரி’ என்ற சொல் வழங்குகின்றது. மலையாளத்தில் இன்றும் அரிசியை ‘அரி’ என்றே குறிக்கின்றார்கள். ஆதலால் அரி என்பதே அரிசியின் ஆதிவடிவம் போலும். (தமிழ் விருந்து. 96.)
வேர்ச்சொல்லியல்
பண்டைத் தமிழ் நாட்டினின்றும் அரிசியை ஏற்றுமதி செய்த கிரேக்கர்கள் அதனை ‘அருஸா’ என்றார்கள்
அதுவே ஆங்கிலத்தில் ரயிஸ் (Rice) என்று ஆயிற்று
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்