சொல் பொருள்
நீர் அரித்தெடுத்து ஓடும் நிலை, சல்லடையிட்டு அரிக்கும் நிலை, அரி சிறங்கின் சொறிதல் நிலை அரிப்பு எனப்படுதல் பொதுவழக்கு
சொல் பொருள் விளக்கம்
நீர் அரித்தெடுத்து ஓடும் நிலை, சல்லடையிட்டு அரிக்கும் நிலை, அரி சிறங்கின் சொறிதல் நிலை அரிப்பு எனப்படுதல் பொதுவழக்கு. அரிப்பு என்பது ஓயாது அனற்றுதல், வந்து வந்து கேட்டுப் பறித்தல், அரித்தெடுக்கப்பட்ட கள் என்பவை மக்கள் வழக்கில் உள்ளவை. இவை தென்னகப் பொது வழக்காகும். அரி என்பது சிறுமையளவினது ஆதலால் மொத்தமாக – பெரிதாக – அமைவன அல்ல. “அரிதலைப் பாளை” என்பார் கம்பர். அரி, செவ்வரி (கண்வரி) ஆதல் உண்டு. அரி = அரிசி; அரிந்து வைத்த அரிதாள்.
குறிப்பு:
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்