சொல் பொருள்
அரிப்பு – சிறிது சிறிதாகச் சுரண்டுதல்.
பறிப்பு – முழுமையாகப் பறித்துக் கொள்ளுதல்.
சொல் பொருள் விளக்கம்
“அரித்துச் சேர்த்ததை எல்லாம் பறித்துக் கொண்டு போய் விட்டான்” என ‘அரிப்புப் பறிப்புக்’ கொடுமைகளைப் பழிப்பர். சிறுகச் சிறுகச் சுரண்டியதை மொத்தமாகப் பறித்துக் கொண்டு விட்டான். இதற்கு இது தக்கதே என்பது போன்ற கருத்தில் இருந்து வந்தது’ ‘அரிப்புப் பறிப்பு’ ஆகும். கறையான் அரித்தலையும், வழிப்பறியையும் கருதுக.
குறிப்பு:
இது ஒரு இணைச்சொல்.
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்