சொல் பொருள்
(வி) 1. அருந்து என்பதன் பிறவினை, உண்ணச்செய், 2. நுகரச்செய், அனுபவிக்கச்செய்,
சொல் பொருள் விளக்கம்
1. அருந்து என்பதன் பிறவினை, உண்ணச்செய்,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
feed
cause to experience, enjoy
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: ஊன்சோற்று அமலை பாண் கடும்பு அருத்தும் செம்மற்று அம்ம நின் வெம் முனை இருக்கை – புறம் 33/14,15 தசையொடு கூடிய சோற்றுத்திரளையை பாண் சுற்றத்திற்கு ஊட்டும் தலைமை உடைத்து நினது வெய்ய முனையாகிய இருப்பிடம் மலையவும் கடலவும் மாண் பயம் தரூஉம் அரும் பொருள் அருத்தும் திருந்து தொடை நோன் தாள் – பெரும் 67,68 மலையில் உள்ளனவும், கடலில் உள்ளனவும்(ஆன) சிறந்த பயனைக் கொடுக்கும் அரிய பொருளை (எல்லாரும்)நுகரச்செய்யும் திருத்தமான தம் வினையில் வலிய முயற்சியினையும்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்