சொல் பொருள்
அருமை – பிறர்க்கு அரிதாம் உயர்தன்மை.
பெருமை – செல்வம், கல்வி, பதவி முதலியவற்றால் உண்டாகும் செல்வாக்கு.
சொல் பொருள் விளக்கம்
‘அருமை பெருமை தெரியாதவன்’ எனச் சிலர் பழிப்புக்கு ஆளாவர். ஒருவரது அருமை பெருமைகளை அறிந்து நடத்தல் வேண்டும் என்பது உலகோர் எதிர்பார்ப்பாம். ஆனால் ‘அருமை பெருமை’ ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவகையாக அல்லவோ தோன்றுகின்றது.
அரிது என்பதன் வழிவந்தது அருமை.
பெரிது என்பதன் வழிவந்தது பெருமை.
குறிப்பு:
இது ஒரு இணைச்சொல்.
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்