சொல் பொருள்
அரைத்தல் – தின்னுதல்
சொல் பொருள் விளக்கம்
ஓயாமல் ஒழியாமல் தின்று கொண்டிருப்பதை ‘அரைத் தல்’ என்பது வழக்கு. ‘அரைவை நடக்கிறது போலிருக்கிறதே’ என்பதும் அரைவையாளியிடம் நகைப்பாகக் கேட்கும் கேள்வி. அரைத்தல் அம்மியில் நிகழும். அரைவை ஆலைகளும் இப்பொழுது எங்கும் காண்பன. அம்மியும், அரைவைப் பொறியும் இல்லாமலே அரைக்கவல்லான், குடியை அரைக்காமல் விடுவானா? மெல்லெனச் சுருங்கத் தின்பானைக் குறிப்பதன்று அரைவை. அவனுக்கு எதிரிடையானைக் குறிப்பது.
குறிப்பு:
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்