சொல் பொருள்
அறி – ஒலி, மணம் முதலியவற்றால் அறியும் அடையாளம்.
குறி – தோற்றத்தால் அல்லது உருவால் அறியும் அடையாளம்.
சொல் பொருள் விளக்கம்
“வண்டி வரும் அறிகுறியே இல்லையே” என நெடுநேரம் வண்டிக்குக் காத்துக் கிடப்பவர் கூறுவர். வண்டி வரும் ஒலியும் இல்லை; புகை முதலிய தோற்றமும் இல்லை என்பதாம்.
மழை பெய்யும் அறிகுறியே இல்லை என்றால் பெய்தற்கு ஏற்ற காற்றும் வெயிலும் இல்லை; மழை முகிலும் மின்னல் இடியும் இல்லை என்பதாம்.
அறி என்னும் பொதுப்பொருள் உருவக் காட்சியை விலக்கி ஒலி, மணம் முதலியவற்றைக் குறித்து நின்றதாம். குறி என்பது உருவக் காட்சியைக் குறித்து நின்றதாம்.
குறிப்பு:
இது ஒரு இணைச்சொல்.
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்