சொல் பொருள்
பகுதி
முன்னிலை
சொல் பொருள் விளக்கம்
(1) அறு என்னும் பகுதியினடியாக, அறம், அறல், அறவு, அறவை, அறுதல், அறுதி, அறுத்தல், அறுப்பு, அறும்பு, அறுகால் அல்லது அறுதாள், அறுவை, அறை, அற்றம், அற்றை, ஆறு, முதலிய, பலசொற்கள் பிறக்கின்றன.
(தமிழ் வியாசங்கள். 52.)
(2) குறு என்பதில் இருந்து குறிது குறியன் என்றும், சிறு என்பதில் இருந்து சிறியர் என்றும் சொற்கள் தோன்றுமாறு அறு என்பதில் இருந்து அறிதல் பிறந்தது எனக் கொள்க…. அறு என்ற முன்னிலை அறி என்று நின்றபின், அறிவு, அறிகை, அறிக்கை, அறிவிப்பு, அறிஞர் என்ற பல பெயர்கள் அதனினின்றும் தோன்றின. (செந்தமிழ்ச் செல்வி. 2:141.)
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்