சொல் பொருள்
இல்லாமை, சாவு, சொந்தம், முடிவு, முடிந்த விலை, விலைச்சீட்டு, முடிந்த முடிபு
சொல் பொருள் விளக்கம்
இல்லாமை, சாவு, சொந்தம், முடிவு, முடிந்த விலை, விலைச்சீட்டு முதலிய பலபொருளையுந் தாராநின்றது. இது பொருளறுதலில் இல்லாமையும், உயிரறுதலிற் சாவும், பிறருக்கு உரிமையறுதலிற் சொந்தமும், அறும் நிலையாதலின் முடிவும், மேற்பேச்சற்றுத் தீர்ந்த விலையாதலின் முடிந்த விலையும், ஒருவனுக்குரித்தாய பொருள் விற்கப் பெற்றமையின் அவனது உரிமையற்று வாங்கினானிடஞ் சேர்தலின் அங்ஙனம் விற்றுரிமையற்றதற்கு அறிகுறியாகிய விலைச்சீட்டுமாகிய பலவற்றையுமுணர்த்துவதாயிற்று. (தமிழ் வியா. 53.)
ஒரு நிலத்தை அளந்து அளவுக்குத் தகவோ மரம் கிணறு முதலியவை கணக்கிட்டோ பாராமல் அப்பொழுது தீர்மானித்துத் தருதலை அன்றிப் பின் தொடர்ச்சி இல்லாமல் விலை முடிவு செய்து நிலத்தைப் பதிவு செய்து தருதல் அறுதிக்‘கிரையம்’ எனப்படும். அறுதி என்பது முடிந்த முடிபு என்னும் பொருளதாம். இது நெல்லை, முகவை வழக்கு.
குறிப்பு:
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்