சொல் பொருள்
அறுத்துக் கட்டல் – தீர்த்துக் கட்டுதல்.
சொல் பொருள் விளக்கம்
நெற்பயிர் கதிர் வாங்கி மணிதிரண்ட பின்னர் அறுத்துக் கட்டாகக் கட்டிக் களத்திற்குக் கொண்டுபோய்க் கதிரடித்தல் வழக்கம். அறுத்துக் கட்டலாம் இவ்வேளாண்மைத் தொழிற் சொல், வேறொரு வகையில் குறிப்பு மொழியாக வாழ்வில் பயன் படுத்தப்படுகின்றது. வாழ்க்கைத் துணையாக இருந்தவர்களுக்குள் கருத்து வேறுபாடு முற்றி இனி இணைந்து வாழ முடியாது என்னும் நிலைமை உண்டாகியபோது அவர்கள் மணவிலக்குப் பெறுதலும், விரும்பும் வேறொருவரை மணந்து வாழ்தலும் உண்டு. அதனை அறுத்துக் கட்டல் என்பர். அறுத்தல் மணவிலக்கு, கட்டல் மீள்மணம். தாலிகட்டுதல், தாலியறுத்தல் என்பவை அறிக.
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்