சொல் பொருள்
(பெ) கார்த்திகை
சொல் பொருள் விளக்கம்
கார்த்திகை
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
the star karthigai, Pleiades, as containing six stars
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: அறுமீன் பயந்த அறம் செய் திங்கள் – நற் 202/9 கார்த்திகை மீன்களோடு கூடிய அறம்செய்வதற்கான முழுத்திங்கள் நாளில் மழை கால் நீங்கிய மாக விசும்பில் குறு முயல் மறு நிறம் கிளர மதி நிறைந்து அறுமீன் சேரும் அகல் இருள் நடுநாள் மறுகு விளக்கு_உறுத்து மாலை தூக்கி பழ விறல் மூதூர் பலருடன் துவன்றிய விழவு உடன் அயர வருக தில் அம்ம – அகம் 141/6-11 மழை பெய்தல் ஒழிந்த வானின்கண்ணே குறிய முயலாகிய மறுவின் நிறம் விளங்க, மதி நிறைவுற்று கார்த்திகையைச் சேரும் இருளகன்ற நடு இரவில் தெருக்களில் விளக்குகளை நிரல்பட ஏற்றி மாலைகளைத் தொங்கவிட்டு பழமையான வென்றியுடைய ஊரின்கண் பலருமொருங்கு சேர்ந்த விழவினை நம்முடன் கொண்டாட வருவாராக
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்