சொல் பொருள்
அற்றைப்பட்டினி – ஒவ்வொரு நாளும் ஒரு வேளையோ இரு வேளையோ சோற்றுக்கு இல்லாமல் பட்டினி கிடத்தல் .
அரைப்பட்டினி – ஒவ்வொரு வேளையும் வயிறார உண்ண வழியின்றி அரை வயிறும் குறைவயிறுமாகக் கிடத்தல்.
சொல் பொருள் விளக்கம்
அற்றைப் பட்டினி ‘ பொழுது மறுத் துண்ணல்’ என நற்றிணையில் சொல்லப்படும். ஒரு வேளையுண்டு ஒரு வேளையுண்ணாத வயிற்றை, ஆற்றில் மேடு பள்ளமாய்ப் படிந்துள்ள மணல் வரிக்கு உவமையாகச் சொல்கிறது அது. வயிற்று மேடு பள்ளம், மணல் மேடு பள்ளம் போலக் காட்டப்படுகிறது. உண்ட வயிறு மேடு; உண்ணாத வயிறு பள்ளம். பட்டுணி-பட்டினி.
குறிப்பு:
இது ஒரு இணைச்சொல்.
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்