சொல் பொருள்
(பெ) 1. கலக்கம், துன்பம், 2. வாடுதல்
சொல் பொருள் விளக்கம்
1. கலக்கம், துன்பம்,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
distress, vexation
withering, fading
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: அலந்தலை மூது ஏறு ஆண் குரல் விளிப்ப – அகம் 367/3 கலக்கமுற்ற முதிய ஏறு தன் ஆண்குரல் தோன்ற அழைத்திட அலந்தலை ஞெமையத்து வலந்த சிலம்பி – அகம் 111/5 வாடிக்காய்ந்துபோன தலையினையுடைய ஞெமைமரத்தின்மீது பின்னிய சிலந்தியின் கூடானது அத்த ஆலத்து அலந்தலை நெடு வீழ் – அகம் 385/9 நெறியிலுள்ள ஆலமரத்தின் வாடிப்போன நெடிய விழுது
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்