சொல் பொருள்
(பெ) 1. சுழற்சி, 2. மனச்சுழற்சி, மனக்கலக்கம்,
சொல் பொருள் விளக்கம்
‘அலமரல்’ ‘தெருமரல்’ ‘உழலுதல்’ என்னுஞ்சொற்கள், குற்றவாளிகளைச் சக்கரத்திலிட்டுச்
சுழற்றிக் கொன்றமையைத் தெரிவிக்கும். (சொல். கட். 25.)
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
whirling, spinning around
pertubation
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: அலமரல் ஆயமொடு யாங்கணும் படாஅல் – அகம் 7/3 சுழன்று திரியும் உன் தோழியருடன் எங்கேயும் போகவேண்டாம் அலமரல் வருத்தம் தீர – நற் 9/3 மனக்கலக்கத்தோடுகூடிய வருத்தம் தீர அலமரல் மழை கண் மல்கு பனி வார – அகம் 233/1 கலக்கமுள்ள குளிர்ந்த கண்ணிலிருந்து நிறைந்த நீர் ஒழுக
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்