Skip to content

சொல் பொருள்

(வி) 1. தங்கு, 2. சுருங்கு, குறைவாகு

2 (பெ.அ) மிகுந்த

3. (பெ) இரவு

சொல் பொருள் விளக்கம்

1. தங்கு

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

அரும் சுரம் செல்வோர்க்கு அல்கு நிழல் ஆகும் – நற் 137/8

அரிய பாலை நிலத்தில் செல்வோருக்குத் தங்குவதற்கான நிழலாகும்

ஆடிய தொழிலும் அல்கிய பொழிலும் – நற் 131/1

விளையாடிய விளையாட்டுக்களையும், தங்கிய சோலைகளையும்

அல்குறு வரி நிழல் அசைஇ – அகம் 121/9

சுருங்கிய வரிவரியாக உள்ள நிழலில் இளைப்பாறி

அல்கு படர் உழந்த அரி மதர் மழை கண் – நற் 8/1

மிக்க துன்பம் உழந்த செவ்வரி பரந்த மதர்த்த குளிர்ந்த கண்கள்

அல்குறு பொழுதில் தாது முகை தயங்க – குறு 273/1

இரவாகும் வேளையில் தாதையுடைய முகைகள் மலர்ந்து திகழும்படி

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *