சொல் பொருள்
நெடிலும் குறிலும் கூடிய கூட்டத்துப் பிறந்த பின்னர்ப் பிளவு படா ஓசையை அளபெடை என்று ஆசிரியர் வேண்டினார்
சொல் பொருள் விளக்கம்
கோட்டு நூறும் (சுண்ணாம்பு) மஞ்சளும் கூடிய வழிப்பிறந்த செவ்வண்ணம் போல, நெடிலும் குறிலும் கூடிய கூட்டத்துப் பிறந்த பின்னர்ப் பிளவு படா ஓசையை அளபெடை என்று ஆசிரியர் வேண்டினார். இவை கூட்டிச் சொல்லிய காலத்து அல்லது புலப்படா, எள்ளாட்டிய வழியல்லது எண்ணெய் புலப்படாதவாறு போல என உணர்க. (தொல். எழுத்து. 6. நச்.)
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்