சொல் பொருள்
(வி)1. கொடு, 2. கருணைகாட்டு, அருள்செய், 3. அன்புடன் இரு, 4. கனி
2. (பெ) 1. கருணை, அன்பு, 2. காத்தல், 3. வண்டு, 4. குளிர்ச்சி,
சொல் பொருள் விளக்கம்
கொடு, give
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
give, bestow, be gracious, showloving kindness, be kindly, ripen, become mellow, graciousness, love, protecting, taking care of, bee, beetle, coolness
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: இன்முகம் கரவாது உவந்து நீ அளித்த அண்ணல் யானை எண்ணின் – புறம் 130/4,5 இனிய முகத்தை ஒளியாது மகிழ்ந்து நீ கொடுத்த தலைமையையுடைத்தாகிய யானைய எண்ணிப்பார்த்தால் அஞ்சினர்க்கு அளித்தலும் வெம் சினம் இன்மையும் – சிறு 210 (தனக்கு)அஞ்சியவர்க்கு அருள்செய்தலையும், கொடிய வெகுளி இல்லாமையையும் நறு வீ தாழ் புன்னை கீழ் நயந்து நீ அளித்தக்கால் மறு_வித்தம் இட்டவன் மனம் போல நந்தியாள் – கலி 136/13,14 நறிய மலர்கள் உதிர்ந்துகிடக்கும் புன்னை மரத்தின் கீழ் விருப்பத்துடன் நீ இவளிடம் அன்புசெய்தபோது மறுதாயம் கிட்டியவன் மனத்தைப் போல மகிழ்ந்து சிறந்தவள், கானல் பெண்ணை தேன் உடை அளி பழம் – நற் 372/2 கடற்கரைச் சோலையின் பனையின் தேனையுடைய மிகக் கனிந்த பழம் அளி ஒரீஇ காதலர் அகன்று ஏகும் ஆரிடை – கலி 16/14 கொஞ்சமும் இரக்கமின்றி நம் காதலர் நம்மைப் பிரிந்து செல்லும் அரிய காட்டுவழியில் விண் அளி கொண்ட வியன் மதி அணி கொள – பரி 13/5 வானத்திலிருந்து காத்தலை மேற்கொண்ட முழுமதியைப்போன்று அழகு கொள்ள நல்ல கமழ் தேன் அளி வழக்கம் எல்லாமும் – பரி 10/118 நறுமணம் கமழும் தேனை உண்ணப் புறப்பட்டன வண்டினம் எல்லாம் வெம் சுடர் ஒளியும் நீ திங்களுள் அளியும் நீ – பரி 3/67 வெம்மையான சுடராகிய ஞாயிற்றின் ஒளியும் நீ! குளிர் திங்களின் குளிர்ச்சியும் நீ!
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்