சொல் பொருள்
(பெ) ஒரு சங்ககால ஊர்,
சொல் பொருள் விளக்கம்
ஒரு சங்ககால ஊர்,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
a city in sangam period
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: ஒளிறு வாள் தானை கொற்ற செழியன் பிண்ட நெல்லின் அள்ளூர் அன்ன என் ஒண் தொடி நெகிழினும் நெகிழ்க – அகம் 46/13-15 ஒளிவீசும் வாள்படையைக் கொண்ட வெற்றி பொருந்திய செழியனது நெல்பொலி கொண்ட அள்ளூர் நகரைப் போன்ற, எனது ஒளிரும் வளையணிந்த தலைவியின் அழகு குன்றினும் குன்றுக; செழியனின் அள்ளூர் என்பதால் இது பாண்டியநாட்டைச் சேர்ந்தது என்பது பெறப்படும். இது நெல்வளம் மிக்கது என்கிறார் பாடலாசிரியர். இவர் அள்ளூர் நன்முல்லையார் எனப்படுதலால் இவர் தன் ஊரைப்பற்றியே பாடியுள்ளார் எனலாம்.
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்