சொல் பொருள்
அழகு என்பது பலருக்குக் கணக் கவர்ச்சியும் சிலர்க்கு நிலைக் கவர்ச்சி யும், ஒருவர்க்கே நிலையான கவர்ச்சி எதிர் கவர்ச்சியும் தருவது
சொல் பொருள் விளக்கம்
அழகு என்ற பொருளில் அணி என்ற சொல் அழகு, அந்தம், அம், ஏர், வனப்பு, மாதர், மயல் முதலிய பல சொற்களுடன் பொருள் தொடர்புடையது. இவற்றுள் அம், அந்தம், ஏர் ஆகியவை கணநேரக் கவர்ச்சி மட்டுமே தருவது. கணநேரக் கவர்ச்சியைப் புதிது புதிதாகத் தருவது. மாதர் என்பது கவர்ச்சியுடன் செயலற்ற மயக்கம் தருவது. மயல் என்பதும் அது. அழகு என்பது பலருக்குக் கணக் கவர்ச்சியும் சிலர்க்கு நிலைக் கவர்ச்சி யும், ஒருவர்க்கே நிலையான கவர்ச்சி எதிர் கவர்ச்சியும் தருவது. அழகு ஒன்றே சமுதாயங் கடந்த இனக்கவர்ச்சி என்பதை இது காட்டுகிறது. (திருக்குறள். மணிவிளக்கவுரை . 484.)
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்