சொல் பொருள்
விடுமுறை, அவதி என்பதற்குத் துயரப்பொருள் உண்டு
சொல் பொருள் விளக்கம்
வேலையோ கல்வியோ இல்லாமல் விடப்படும் விடுமுறையை அவதி என்பது நெல்லை வழக்கு. அவம் என்பது தம் கடமை செய்யாது இருக்கும் நிலை. தவம் என்பது தம் கடமை செய்யும் நிலை. “தவம் செய்வார் தம் கருமம் செய்வார்” என்பது திருக்குறள். பணியிலாப் பொழுதை அவப்பொழுதாகக் கருதிச் சொல்லப்பட்டது இது. இனி, அவதி என்பதற்குத் துயரப்பொருள் உண்டு. அது அவலம் என்பதன் வழிவந்தது.
குறிப்பு:
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்