சொல் பொருள்
(பெ) மார்பு, ஆக்கம், நலப்பாடு.
சொல் பொருள் விளக்கம்
ஆக்கம், நலப்பாடு என்பவற்றைக் குறிப்பது ஆகம். ஆக்கம் என்பதன் தொகுத்தல் அது. “ஆகமாக ஒருவேலை செய்ய மாட்டான்” “ஆகமாக எதையாவது செய்யேன்” என்பவை வழக்கில் சொல்லப்படுவன. உருப்படியான – ஆக்கமான என்பது இதன் பொருளாம். இது முகவை வட்டார வழக்கு.
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
breast
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: அணி முலை ஆகம் முயங்கினம் செலினே – குறு 274/8 அழகிய முலைகலைக் கொண்ட மார்பைத் தழுவிச் சென்றால்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
இது ஒரு வழக்குச் சொல்
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்