சொல் பொருள்
ஆகாவழி – கூடாவழியில் செல்பவன்
சொல் பொருள் விளக்கம்
“ஆகின்ற வழியைப்பார் ; ஏன் ஆகாத வழியில் போகிறாய்” என்பது உண்டு. ஆனால் இவ்வாகா வழி, வழியைக்குறியாமல் ஆகாத வழியில் செல்லும் ஆளைக்குறித்தல் வழக்கில் உள்ளதாம். “அவன் ஆகாவழி” என்றாலே, ஆகாத செயலை செய்தற்கு ஆகாத வழியில் செல்பவன் என்பது பொருளாம். கூடா ஒழுக்கம் என்பது போல, ஆகாவழி என்க. ஆகா வழியே ஆக்க வழியாகக் கொண்டவர் பெருகினால் நாட்டு நிலை என்னாம்?
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்