ஆக்கம் என்பதன் பொருள்விளைவு, பயன், விருத்தி, வளர்ச்சி, முன்னேற்றம்,உண்டுபண்ணு.
1. சொல் பொருள்
(பெ) 1. செல்வம், 2. விளைவு, பயன், 3. விருத்தி, வளர்ச்சி, முன்னேற்றம், 4. ஆக்கம் மேல்மேல் உயர்தல்.
உண்டுபண்ணு, படை
2. சொல் பொருள் விளக்கம்
ஆக்கம் தருவதனை ஆக்கம் என்றார். ஆக்கப்படுவதும் ஆக்குவதும் ஆகலின், ஆக்கம் மேல்மேல் உயர்தல். (திருக்குறள். 31. பரிமே.)
மொழிபெயர்ப்புகள்
3. ஆங்கிலம்
wealth, prosperity, fortune
produce, create
progress, development
4. தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு
தேய்வன கெடுக நின் தெவ்வர் ஆக்கம் – மது 196 (கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து)தேய்ந்து கெடுக நின் பகைவரின் செல்வம் ஆடு அமை ஆக்கம் ஐது பிசைந்து அன்ன தோடு அமை தூவி தடம் தாள் நாரை – நற் 178/1,2 அசைகின்ற மூங்கிலில் விளையும் நெல்லை மெல்லிதாக பிசைந்து கொள்ள நின்ற தோகை போல தாள்தாளாக அமைந்த சிறகுகளையும், நீண்ட கால்களையும் உடைய நாரையால் – அமை – மூங்கில், அதனிடத்து விளையும் நெல்லை ஆக்கம் என்றார் – ஔவை.சு.து.உரை விளக்கம் ஈழத்து உணவும் காழகத்து ஆக்கமும் – பட் 191 ஈழத்தின் உணவுப்பொருளும், கடாரத்தின் விளைபொருள்களும் நினையின் நட்டோர் ஆக்கம் வேண்டியும் ஒட்டிய நின் தோள் அணி பெற வரற்கும் அன்றோ தோழி அவர் சென்ற திறமே – நற் 286/6-9 நினைத்துப்பார்த்தால் தம் நண்பர்களின் வளர்ச்சிக்காவும், அவரை அண்டியிருக்கும் உனது தோள்கள் அணிகலன்களால் வனப்பெய்யவும் அன்றோ தோழி! அவர் சென்றதன் நோக்கம். புரை தவ பயன் நோக்கார் தம் ஆக்கம் முயல்வாரை வரைவு இன்றி செறும் பொழுதில் கண்ணோடாது உயிர் வௌவும் அரைசினும் நிலை இல்லா பொருளையும் நச்சுபவோ – கலி 8/15-17 தமக்கு உயர்ச்சி மிகும்படியாகத் தாம் பெறும் பயனைப் பாராமல், அரசரின் வளர்ச்சிக்காகவே முயலும் அமைச்சரை ஒரு வரையின்றிக் கோபிக்கும் பொழுதில் கருணையின்றி அவரின் உயிரைப் பறிக்கும் அரசனின் வாழ்வு அழிந்துபோவதைக்காட்டிலும் விரைந்து அழியும் நிலையற்ற பொருளையா விரும்பிச் செல்கிறாய்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்