சொல் பொருள்
ஆடி அடங்கல் – அமைதல்
சொல் பொருள் விளக்கம்
ஆடாத ஆட்டம் ஆடியவன் எவ்வளவு காலம்தான் ஆட முடியும்? ஆடிய மட்டும் ஆடிவிட்டு பொருள் சுண்டவும் உடலின் உரம் சுண்டவும், குருதி சுண்டவும், நாடி நரம்புகள் சுண்டி இழுக்கவும் பழைய ஆட்டம் போடமுடியாமல் வேறு வழியின்றி அடங்குதல் உண்டு. இதனை ஆடி அடங்கல் என்பர். ஆடி அடங்கிய பின்னராவது தெளிவு ஏற்படுமா? பெரும் பாலோர்க்கு இல்லை. மூதா (கிழப்பசு) இளம் புல்லைத் தின்ன முடியாமல் (பல்போய் விட்டமையால்) நாவால் நக்கி இன்புறல் போல மனம் அசை போட்டுக் கிளு கிளுப்பதை விடுவது இல்லை. ஆடிய ஆட்டத்தின் முதிர்ச்சி எளிதாகப் போகுமா?
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்