சொல் பொருள்
ஆட்டங் கொடுத்தல் – உறுதிப்பாடில்லாமை
சொல் பொருள் விளக்கம்
பல் ஆடுதல், கற்றூண் ஆடுதல், சுவர் ஆடுதல் என உறுதியாக நிற்க வேண்டிய இவை உறுதியின்றி ஆடுதலை ஆட்டங்கொடுத்தல் எனப்படுதல் உண்டு. ஆடுதல், அசைதல் ஆகியவை காற்றால் நிகழ்பவை அவ்வாறு காற்றால் ஆடுதல் இன்றிப் பற்றுக்கோடு உறுதியாக இல்லாமையால் நேர்வதையே ஆட்டங் கொடுத்தல் என்பர். ஆடக் கூடாதது ஆடுவதே ஆட்டங் கொடுத்தல் எனலாம். இவ்வழக்கில் இருந்து, “அவர் பதவி ஆட்டங்கொடுத்து விட்டது”. “அவர் நிலைமை ஆட்டங் கொடுத்துவிட்டது” என்பனபோல வழக்கில் வந்துவிட்டன ‘குடும்பமே ஆட்டங் கொடுத்து விட்டது’ என்பது பேரிழப்பு அல்லது பேரதிர்ச்சியால் நிகழ்வதாம்.
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்