சொல் பொருள்
(பெ) சங்ககால நீச்சல் நடனக்காரன்
சொல் பொருள் விளக்கம்
சங்ககால நீச்சல் நடனக்காரன்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
an ancient synchronized swimmer
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: இவனது மனைவியின் பெயர் ஆதிமந்தி. இவர் பெயரில் ஒரு சங்ககாலப் புலவர் உண்டு. (குறுந்தொகை – 31).கழார் என்ற காவிரி ஆற்றுத்துறையில் இந்த ஆட்டனத்தி மன்னன் கரிகாலன் முன்னிலையில் நீரில் பல சாகசங்கள் செய்துகாண்பித்துக்கொண்டிருந்தபோது, திடீரென்று வந்த வெள்ளத்தால் அடித்துக்கொண்டுபோகப்படுகிறான். இவனது மனைவியான ஆதிமந்தி காவிரிக் கரையோரமாகவே இவனைத் தேடிக்கொண்டு செல்கிறாள். ஆற்றில் அடித்துக்கொண்டுவரப்பட்ட ஆட்டன் அத்தியை மருதி என்ற மீனவப்பெண் காப்பாற்றி அவனுடன் வாழ்கிறாள். இறுதியில் ஆதிமந்தி அவர்கள் இருப்பிடத்தைக் கண்டுபிடித்தபின், ஆட்டனத்தியை ஆதிமந்தியிடம் ஒப்படைத்துவிட்டு மருதி கடலுள் மாய்ந்துகொள்கிறாள். இவர்களைப் பற்றிய விரிவான செய்திகள் பரணர் என்ற புலவரால் அகநானூறு 45, 76, 135, 222, 236, 376 ஆகிய பாடல்களில் கூறப்பட்டுள்ளன. இவனின் மனைவியான ஆதிமந்தி கரிகாற்சோழனின் மகள் என்று கூறுவாரும் உண்டு. ஏற்றியல் எழில்நடைப் பொலிந்த மொய்ம்பின் தோட்டு இரும் சுரியல் மணந்த பித்தை ஆட்டன்அத்தியை காணீரோ என நாட்டின் நாட்டின் ஊரின் ஊரின் கடல்கொண்டன்று எனப் புனல் ஒளித்தன்று எனப் கலுழ்ந்த கண்ணள் காதலன் கெடுத்த ஆதிமந்தி போல – அகம் 236/14-20
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்