சொல் பொருள்
ஆட்டம் போடல் – தவறான நடக்கை
சொல் பொருள் விளக்கம்
“ஆடாத ஆட்டம் எல்லாம் ஆடினான்” என்பதிலுள்ள ஆட்டமே இவ்வாட்டம் போடல். குழயதைகள் ஆடல், கலையாடல் ஒழிந்த கீழ்நிலை ஆடல் இவ்வ்வாடல், இதனை விளக்கவே ‘ஆடாத ஆட்டம்’ எனப்பட்டது. பண்புடையவர் ஆடாத ஆட்டம் இவ்வாட்டம். சூதாட்டம், களியாட்டம், பாலாட்டம் முதலாய ஆட்டம் ஆடாத ஆட்டம். நளன் கதை, தருமன் கதை நாடறிந்த கேடாக இருந்தும் அவ்வாட்டத்தை அரசே ஊக்குகின்றது. இன்றேல் சூதாட்டு களியாட்டு நிகழுமா? பரிசுச் சீட்டு என்பது என்ன? மதுக்கடை அனுமதி என்பது என்ன? பொது மக்களை ஆடாத ஆட்டத்திற்கு ஆளாக்கி விட்டால், அரசின் ஆடாத ஆட்டங்கள் அரங்குக்கு வாராது என்னும் அடிப்படையா? ஆடாத ஆட்டம் அழிவின் தொடக்கம் என்க.
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்