சொல் பொருள்
ஆண்டிகூடி மடங்கட்டுதல் – செயல் நிறைவேறாமை
சொல் பொருள் விளக்கம்
திருமடப் பொறுப்பாளர், செல்வாக்காளர், தொண்டால் சிறந்தோர், பற்றற்ற தூயர் ஆகியோர் இவ்வாண்டியரல்லர், உழையாமல் உண்ண ஒருவழி கண்ட போலியாண்டியர். அவர்கள் சிலர் கூடி. இப்படி ஒரு மடம், இப்படியொரு கிணறு. இப்படியொரு தோட்டம் எனப் பலப் பல திட்டமிட்டுப் பேசி, பசி வந்ததும் சட்டி தூக்கிக் கொண்டு பிச்சையெடுக்கப் போகின்றவர். கூடும் போது தாடியசைப்பாலே திட்டமிட்டு, பசி வந்ததும் மறப்பவர். ஆகலின் நிறைவேறாத் திட்டம் இவ்வாண்டியர் திட்டம். செயலூக்கமில்லார் கூடித் திட்டம் போடு வதை அறிந்தவர். “ஆண்டி கூடி மடங் கட்டியதுபோல் தான் உங்கல் திட்டம் இருக்கும்” என்பர்.
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்