Skip to content

சொல் பொருள் விளக்கம்

(பெ) 1. குதிரையின் நேர் ஓட்டம், 2. தொடக்கம், மூலம், முதல் 3. சங்ககால அருமன் என்பனின் தந்தை, 4. மல்லிநாட்டுக் காரி என்பனின் மகன்

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

Running of a horse in a straight course

beginning, source

father of Aruman of sangam period

son of Kari of Malli land

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

அடி படு மண்டிலத்து ஆதி போகிய
கொடி படு சுவல இடுமயிர் புரவியும் – மது 390,391

தடம் பதிந்த வட்டமான பாதைகளில் ஆதிஎன்னும் ஒட்டத்தில் ஓடின
ஒழுங்குபட்ட பிடரிமயிரினையும், இடுமயிரினையும் (சவரி முடி)உடைய குதிரைகளும்
– ஆதி – குதிரை ஓட்டங்களில் ஒருவகை ஓட்டம் – அதாவது நேராக ஓடல் என்ப – பொ.வே.சோ விளக்கம்

ஆதி அந்தணன் அறிந்து பரி கொளுவ – பரி 5/22

பிரம்மதேவன் செலுத்தும் முறையை அறிந்தவனாக, குதிரையைச் செலுத்த,
– ஆதி அந்தணன் – பிரமன். அந்தணர் மரபுக்கு இவனே ஆதீயாதலின் இவ்வாறு பெயர் பெற்றான் – புலி.கேசிகன்
வாதத்தான் வந்த வளி குதிரை ஆதி
உரு அழிக்கும் அ குதிரை ஊரல் நீ ஊரின் பரத்தை – கலி 96/36,37

இந்த ஆதி என்பவன் அருமன் என்பவனின் தந்தை. அருமனின் ஊர் மூதூர் என்கிறது இப் பாடல். இந்த அருமன்
நற்றிணை 367-இல் குறிக்கப்பெறும் மூதில் அருமன் என்பர்.
பார்க்க : . அருமன்

ஆதி அருமன் மூதூர் அன்ன – குறு 293/4

ஆதி அருமன் என்பானின் மூதூர் போல,

மல்லிகிழான் காரிஆதி என்பவனைப்பற்றி ஆவூர் மூலங்கிழார் புறம் 177-இல் பாடியுள்ளார்.
காரி என்பவன் ஆதியின் தந்தையாதல் வேண்டும். இவன் ஒரு வள்ளல்.

பெரும் பெயர் ஆதி பிணங்கு அரில் குட நாட்டு – புறம் 177/12

பெரிய பெயரை உடையனாகிய ஆதியினது பிணங்கிய அரில்பட்ட காட்டையுடைய குடநாட்டின்கண்

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *