சொல் பொருள்
ஆனானப்பட்டவன் – மிகப் பெரியவன்
சொல் பொருள் விளக்கம்
ஆனவன் என்பது பெரியவன் என்னும் பொருளது. ஆகி வந்தவன் என்பது போன்ற வழக்கு அது. ஆளாதல், பெரியவளாதல் என்பவற்றில் வரும் ஆக்கப் பொருள் ஆதல் போல ‘ஆனவன்’ என்பது வந்ததாம். ஆனவன் என்பது இருமுறையடுக்கி ‘ஆனானப்பட்டவன்’ என்றாகியது. “ஆனானப்பட்டவனெல்லாம். ஆலாகப் பறக்கும் போது இவனெல்லாம் எந்த மட்டு” என்பது வழக்கு. “அம்மி பறக்கும் ஆடிக் காற்றில் எச்சில் இலை எம்மட்டு?” என்பது போன்ற வழக்குத் தொடர் ஈதாம்.
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்