Skip to content
ஆன்மா

ஆன்மா என்பதன் பொருள்ஆறறிவுயிராகியஅறிவுயிர்

1. சொல் பொருள்

கடவுள் தங்குவதனாலேயே இந்த விலங்கு நிலை உயிராகிய ஐயறிவுயிர் ஆறறிவுயிராகிய உயர் அறிவுயிர் ஆகி விடுவதனால் அது ஆன்மாஎனப்படுகிறது

2. சொல் பொருள் விளக்கம்

இத்தொகைப் பெயரில் ‘ஆன்’ என்பது கடவுள். இது ‘அகன்’ அகத்தே அலர்ந்தவன் என்று பொருள்படுவது ஆகும். ‘மா’ என்பது விலங்கு நிலை உயிர். கடவுள் தங்குவதனாலேயே இந்த விலங்கு நிலை உயிராகிய ஐயறிவுயிர் ஆறறிவுயிராகிய உயர் அறிவுயிர் ஆகி விடுவதனால் அது ஆன்மா எனப்படுகிறது. (திருக்குறள். மணிவிளக்கவுரை. ஐ. 254)

மொழிபெயர்ப்புகள்

3. ஆங்கிலம்

animos

4. தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு

உயிர் எனும் ஆன்மா ஒன்றொடும் ஆம் என - மணி 27/239

காலம் ஆன்மா மனம் இவற்றுள் நிலம் - மணி 27/248

பௌத்தனை குறித்து ஆன்மா சைதனியவான் - மணி 29/176

ஆன்மா என்றால் சுகமும் ஆன்மாவும்
தாம் இசையாமையில் அப்பிரசித்த உபயம் - மணி 29/184,185

ஆன்மாவை சா அவயவம் ஆக - மணி 29/300

எ பொருளுக்கும் ஆன்மா இலை என - மணி 30/177

5. வேர்ச்சொல்லியல்

இது animos என்னும் ஆங்கில சொல்லின் மூலம்

இது ஆத்மா என்னும் சமற்கிருத சொல்லின் மூலம்

குறிப்பு:

இது ஒரு வழக்குச் சொல்

இது ஒரு மூலச்சொல்

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *