சொல் பொருள்
1. (வி) இல்லாமற்போன
2. (பெ.அ) 1. சிறந்த, மாட்சிமைப்பட்ட, 2. அடங்கிய,
சொல் பொருள் விளக்கம்
இல்லாமற்போன
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
ceased to exist, excellent, subside, abate
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: அருவி ஆன்ற பெரு வரை மருங்கில் – அகம் 91/3 அருவி இல்லாமற்போன பெரிய மலையின் பக்கத்தில் ஆன்ற கற்பின் சான்ற பெரியள் – அகம் 198/12 சிறந்த கற்பினால் உயர்ந்த பெருமையுற்றவள் அணிச்சிறை இனக்குருகு ஒலிக்குங்கால் நின் திண் தேர் மணிக்குரல் என இவள் மதிக்கும் மன்; மதித்தாங்கே உள் ஆன்ற ஒலியவாய் இருப்ப கண்டு அவை கானல் புள் என உணர்ந்து – கலி 126/6-9 அழகிய சிறகுகளைக் கொண்ட கூட்டமான நாரைகள் ஒலிக்கும்பொழுது, உன் திண்ணிய தேரின் மணி ஓசை என இவள் துணிந்தனள்; துணிந்தவுடனே உள்ளே அடங்கிய ஒலியை உடையவாய் இருக்கக் கண்டு, அவை காட்டினில் பறவைகள ஒலி என உணர்ந்து
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்