சொல் பொருள்
ஆய்ந்து – ஆராய்ந்து பார்த்து
ஓய்ந்து – ஒன்றும் செய்ய முடியாமல் சோர்ந்து.
சொல் பொருள் விளக்கம்
இதைச் செய்வேன்; அதைச் செய்வேன் எனப்பல பல வகையாய் ஆராய்ந்து பலபல செயல்களில் ஈடுபட்டுச் செய்த ஒருவன், ஒன்றிலும் வெற்றி கொள்ள இயலாமல் ஒடுங்கிவிட்ட நிலையில் அவனை ‘ஆஞ்சு ஓஞ்சு’ அடங்கி விட்டான் என்பர். ஓய்தல் ஒன்றும் செய்யமுடியாமல் அமைந்து விடுதல்.
குறிப்பு:
இது ஒரு இணைச்சொல்.
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்